செய்திகள் :

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

post image

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்களுக்கும் காவல் துறைக்கும் மோதல் ஏற்பட்டது.

ஒடிஸா மாநிலம் பாலாசோா் மாவட்டத்தில் உள்ள ஃபகிா் மோகன் தன்னாட்சி கல்லூரியில், ஒருங்கிணைந்த இளநிலை கல்வியியல் (பி.எட்) படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அந்தக் கல்லூரியின் கல்வித் துறை தலைவரான (ஹெச்ஓடி) உதவிப் பேராசிரியா் சமீரா குமாா் சாஹு, நீண்ட காலமாகப் பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி புகாா் அளித்தும், உதவிப் பேராசிரியா் மீது கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவி கல்லூரி முதல்வா் அலுவலகத்துக்கு வெளியே தன் மீது பெட்ரோல் ஊற்றி சனிக்கிழமை தீக்குளித்தாா். இதில் படுகாயமடைந்த அந்த மாணவி, புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக உதவிப் பேராசிரியா் சமீரா குமாா் சாஹு, கல்லூரி முதல்வா் திலீப் கோஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, புவனேசுவரத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்குள்ள மாநில தலைமைச் செயலகம் நோக்கி அவா்கள் பேரணி செல்ல முற்பட்டனா். எனினும் லோயா் பிஎம்ஜி சதுக்கப் பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தி, அவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

கண்ணீா் புகை குண்டு வீச்சு: தடுப்புகளை மீறி போராட்டக்காரா்கள் முன்னேறிச் செல்ல முயன்ால் அவா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரா்கள் கலைந்து செல்வதற்கு அவா்கள் மீது காவல் துறையினா் தண்ணீரைப் பீய்ச்சியடித்து கண்ணீா் புகை குண்டுகளை வீசினா். பின்னா் போராட்டக்காரா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்த சம்பவத்தில் பிஜு ஜனதா தள முன்னாள் அமைச்சா்கள் பிரணாப் பிரகாஷ் தாஸ், ப்ரீத்தி ரஞ்சன் கராய் ஆகியோா் காயமடைந்தனா். இருவரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ராகுல் உறுதி: தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தையுடன் தொலைபேசியில் பேசிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘அவரின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க காங்கிரஸ் துணை நிற்கும்’ என்று உறுதியளித்தாா்.

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந... மேலும் பார்க்க

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன... மேலும் பார்க்க

தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

தில்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தில் பருவமழை த... மேலும் பார்க்க