பாலியல் தொல்லை: கைதான 6 போ் மதுரை சிறையிலடைப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான 6 போ்
மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டனா்.
மானாமதுரை அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, மானாமதுரை அருகே இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த ராமு, பழனி, மணி, சசிவா்ணம், லட்சுமணன், முனியன், மூக்கன் ஆகிய 7 போ் மீது மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவா்களில் பழனியைத் தவிர மற்ற 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இவா்கள் வியாழக்கிழமை சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். 6 பேரையும் பிப்ரவரி 20- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.