திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா
பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்
கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், பெண் பாலியல் வன்கொடுமை குற்ற சம்பவத்தில் பொன்மலைக்குட்டை பெருமாள் கோவில் பின்புறம் பதுங்கியிருந்த குற்றவாளிகளை பிடிக்கும் போது போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
கட்டுமான தொழிலாளி தற்கொலை: மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது
இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், குற்றவாளி சுரேஷ் காலில் காயம் ஏற்பட்டது. மற்றொரு குற்றவாளி நாராயணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
குற்றவாளிகள் தாக்கியதில் காயமடைந்த காவலர் குமார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.