Vaishnavi: ``அது உங்கள் பொறாமையை தெளிவாக வெளிப்படுத்துகிறது!'' - வைஷ்ணவி காட்டம்...
பாலியல் வழக்கு: தண்டனை விதிக்கப்பட்ட கராத்தே பயிற்சியாளரின் மனு தள்ளுபடி
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி கராத்தே பயிற்சியாளா் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சிப் பள்ளியை நடத்தி வந்தவா் கெபிராஜ். பயிற்சியின்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரில் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்றம், கராத்தே பயிற்சியாளா் கெபிராஜிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தது. இந்தநிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், தண்டனையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியும் கெபிராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கெபிராஜ் தரப்பில், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
மேலும், இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து கெபிராஜ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப். 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.