அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
பால்கனியில் நிர்வாணமாக வம்பு செய்த நடிகர் விநாயகன்; சர்ச்சையாகும் வைரல் வீடியோ
கேரளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன் தமிழ் சினிமாக்களில் வில்லன் வேடத்தில் நடித்துப் பிரபலமானவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்திருந்தார். நடிகர் விநாயகன் அவ்வப்போது சர்சைக்குரிய கருதுக்களை பேசி விவாதத்தில் சிக்கிக்கொள்வது வழக்கம்.
2022-ம் ஆண்டு செய்தியாளர் சந்திப்பின்போது மீ டூ குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, திருமணத்துக்கு முன் யாரும் பாலியல் பந்தத்தில் ஈடுபடுவது இல்லையா எனக் கிண்டலாக பதில் கூறியதுடன் பத்து பெண்களுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்திருக்கிறேன். எனக்கு விருப்பப்பட்ட பெண்ணிடம் நான் அனுமதி கேட்டே அவ்வாறு பந்தத்தில் ஈடுபடுகிறேன். பெண்கள் அனுமதியுடன் பாலியல் பந்தத்தில் ஈடுபடுவது மீ டூ குற்றம் ஆகாது எனக் கூறியது சர்ச்சையானது.
2023-ம் ஆண்டு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைந்த சமயத்தில் அவரைப்பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து விவாதத்துக்குள்ளானார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சியில் உள்ள விநாயகனின் வீட்டை உடைத்த சம்பவங்களும் நடந்தது. அதுபோன்று கடந்த ஓராண்டுக்கு முன் விநயகனுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறு குறித்து காவல் நிலையத்துக்கு புகார் சென்றது.
அதுகுறித்து விசாரணைக்காக வீட்டுக்குச் சென்ற பெண் போலீஸிடம் விநாயகன் தகராற்றில் ஈடுபட்டார். மேலும் மது போதையில் காவல் நிலையத்தில் தகராறு செய்ததாக விநாயகன் மீது வழக்கும் பாய்ந்தது.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள தனது வீட்டு பால்கனியில் விநாயகன் நிர்வாணமாக நிற்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் நடிகர் விநாயகன் பச்சை நிற லுங்கியை உடுத்துவதும், ஆடையை அவிழ்த்து நிர்வாண போஸில் பால்கனியில் நடப்பதும், கீழே அமர்ந்திருப்பதும், சிலரைத் திட்டுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவை அவரது வீட்டுக்கு அருகில் மற்றொரு பால்கனியில் இருந்து யாரோ எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சிலர் விநாயகனின் சமூக வலைதள கமென்ட்டுகளிலும் வீடியோவை போஸ்ட் செய்தனர். இதையடுத்து அந்த போஸ்ட் ஒன்றின் ஸ்கிரீன் ஷார்ட்டை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விநாயகன். இதுகுறித்து போலீஸில் யாரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விநாயகன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.