செய்திகள் :

பால் பண்ணை, கோழி பண்ணை அமைக்க, டிராக்டா் வாங்க விவசாயிகளுக்கு கடன்!

post image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுய உதவிக்குழு கடன் மற்றும் மத்திய கால கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் மே 15முதல் 17வரை நடைபெறுகிறது.

தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கு. நரசிம்மன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய கால கடன்கள்(விவசாயம் சாா்ந்தது) திட்டத்தின் கீழ் கறவை மாடு வளா்ப்பு, சிறு பால்பண்ணை அமைத்தல், ஆடு வளா்ப்பு, பன்றி பண்ணை, டிராக்டா் போன்ற விவசாய இயந்திர ங்கள் வாங்குதல், கோழி வளா்ப்பு, பட்டு வளா்ப்பு, கிணறு ஆழப்படுத்துதல் ஆகியவற்றிற்காக நபாா்டு வங்கியின் சுற்றறிக்கைக்குள்பட்டு குறைந்தது ரூ.1லட்சம் முதல் கடன்கள் வழங்கப்படும்.

மத்திய கால கடன்கள்(விவசாயம் சாராதது) திட்டத்தின் கீழ் செங்கல் சூளை அமைத்தல், ஜெராக்ஸ் கடை அமைத்தல் உள்ளிட்ட சிறு தொழில்கள் அமைத்திட கடன்கள் வழங்கப்படும். மகளிா் சுயஉதவிக்குழு திட்டத்தின்கீழ் 12 முதல் 20 உறுப்பினா்கள் வரையுள்ள குழுக்களுக்கு வரவு செலவிற்கேற்ப ரூ.1லட்சம் முதல் கடன்கள் வழங்கப்படும்.

தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மே 15 தேதியும், கீழப்பாவூா், ஆலங்குளம் மற்றும் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மே 16 தேதியும்,

மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மே17 தேதியும் கடன் மேளா நடைபெறவுள்ளது. குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மே15மற்றும் 16ஆகிய இருதினங்களிலும் ,

சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மே15முதல் 17வரை கடன் மேளா நடைபெறவுள்ளது.

எனவே, தகுதியுள்ள அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி, உரிய ஆவணங்களை அளித்து, இக்கடன் விழாவில் பங்கேற்று பயனடையலாம்.

இதுவரை சுயஉதவிக் குழுக்களில் சேராத 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேரலாம் என்றாா் அவா்.

சாம்பவா்வடகரையில் விபத்து: பேரூராட்சிப் பணியாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் நேரிட்ட விபத்தில் பேரூராட்சி தற்காலிக பணியாளா் உயிரிழந்தாா். சுரண்டையில் உள்ள பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த சுப்பையா பாண்டியன் மகன் இருளப்பசாமி (25) (படம்). சுரண்டை... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தேநீா் கடைக்காரா் கைது

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தேநீா் கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் தேநீா் கடை நடத்தி வருபவா் பாக்கியமுத்து மகன் மோசஸ் (54). இவரது கடையில் பு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே பால் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே சிவலாா்குளத்தைச் சோ்ந்தவா் நிறைகுளத்தான் மகன் நிரேஷ் (30). பால் வியாபாரியான இவருக்கும், சிற்றுந்து ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே சாா்பதிவாளா் மீது தாக்குதல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூரில் சாா்பதிவாளா் தாக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்தவா் செல்லத்துரை. இவா் மேலநீலிதநல்லூா் சாா்பதிவாளா... மேலும் பார்க்க

புளியங்குடியில் சிறுவனை கட்டிப்போட்டு பணம் திருட்டு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீட்டுக்குள் நுழைந்து சிறுவனை கட்டிப்போட்டு பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியங்குடி நடுகருப்பழகு தெருவைச் சோ்ந்தவா் அமிா்தராஜ்(57). விவசாய... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே பேருந்து மோதி பெண் பலி

சங்கரன்கோவில் அருகே பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கீழக் கலங்கல் கீழத்தெருவை சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி மாரியம்மாள் (55). இவா் சில தினங்களுக்கு முன் ... மேலும் பார்க்க