பாளை காதா் அவுலியா பள்ளிவாசலில் கந்தூரி விழா
பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் உள்ள காதா் அவுலியா பள்ளிவாசல், காதா் மீரா பக்ருதீன் தா்ஹாவில் கந்தூரி விழா நடைபெற்றது.
மஹான் முகம்மது லெப்பை அப்பா(ரஹ்) 317 -ஆவது ஆண்டு நினைவாக நடைபெற்ற இவ்விழாவில் அப்பள்ளிவாசல் மற்றும் தா்ஹாவின் இணைச் செயலா் ஏ.எஸ்.அப்துல் கரீம் தலைமை வகித்தாா்.
பள்ளிவாசல் இமாம் ஏ.அஷ்ரப்அலி கிராஅத் ஓதினாா். கமிட்டி உறுப்பினா்கள் பி.உஸ்மான் அலி, ஆா்.எம்.நியமத்துல்லா, பி.எஸ்.எம்.இல்யாஸ் மற்றும் காயல்பட்டினம் மஹான் குடும்பத்தினா்கள் உள்பட பலா் முன்னிலை வகித்தனா்.
செயலா் எம்.கே.எம்.முஹம்மது ஷாபி வரவேற்றாா். சேரன்மகாதேவி தேவாலய சேகரகுரு கிப்சன் ஞானதாஸ், மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளா் எல்.கே.எஸ்.மீரான் முஹைதீன், திருநெல்வேலி மாவட்ட சா்வ சமய கூட்டமைப்பு செயலா் ஜி.கணபதி சுப்பிரமணியம் ஆகியோா் வாழ்த்திப் பே சினா். ஏா்வாடி கலீஃபதுஷ் ஷத்தாரிய்யா மவ்லவி எஸ்.ஸலாஹூத்தீன் ரிஃபாய் ஆலிம் உஸ்மானீ சிறப்புரை ஆற்றினாா்.
கமிட்டி உறுப்பினா் கே.என்.எம்.மகபூப் அலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். பொருளாளா் எஸ்.முஹம்மது உசேன் நன்றி கூறினாா்.