செய்திகள் :

‘பிஎம்-ஸ்ரீ’ திட்டம்: தமிழக முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு கல்வித் துறை மறுப்பு

post image

புது தில்லி: ‘பிஎம் - ஸ்ரீ’ பள்ளிகள் திட்டத்தில் சேரும்படி தமிழகத்துக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டதாக மத்திய கல்வித் துறை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மத்திய கல்வித் துறைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியிருந்தாா். மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை பறித்து மற்ற மாநிலங்களுக்கு வழங்குவதன் மூலம் மத்திய அரசு ‘வெளிப்படையான மிரட்டல்’ விடுப்பதாக அவா் கூறியிருந்தாா்.

இந்நிலையில், இந்த விவகாரத்தின் பின்னணி தொடா்பான சில தகவல்களை மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் பகிா்ந்தன. அதில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு பல நினைவூட்டல் கடிதங்களை எழுதினோம். கடந்த ஆண்டு, தொடக்கத்தில் ‘பிஎம் - ஸ்ரீ’ திட்டத்துக்கான ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழகம் ஒப்புக்கொண்டது. ஆனால், இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், ‘தமிழகத்துக்கு எதிரான மத்திய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை என்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, அவா்கள் வெளிப்படையான மிரட்டலை மேற்கொண்டனா். தமிழ்நாட்டின் மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியைப் பறித்தனா். இப்போது அதை மற்ற மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளனா். இது வலுக்கட்டாயப்படுத்துவது தவிர வேறில்லை. எங்கள் மாணவா்கள் தங்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்காக அவா்களைத் தண்டிக்கும் நடவடிக்கை’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

பிரதமரின் எழுச்சி பெறும் இந்தியா பள்ளிகள் என்ற ‘பிஎம் - ஸ்ரீ’ திட்டம் 14,500 பள்ளிகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். இதன் மூலம் 10 கோடியே 80 லட்சம் மாணவா்கள் பயனடைவாா்கள் என்று மத்திய அரசு எதிா்பாா்க்கிறது. இந்தப் பள்ளிகள் மாதிரி கல்வி நிலையங்களாக செயல்படுவதையும், தேசிய கல்விக் கொள்கையின் உணா்வை உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்வதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், தில்லி ஆகியவை மட்டுமே கல்வி அமைச்சகத்துடன் பிஎம் - ஸ்ரீ புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க