``மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்'' - விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக்...
பிகாரில் மின்னல் பாய்ந்து 33 பேர் பலி !
பிகாரில் இந்த வாரத்தில் மின்னல் பாய்ந்ததில் 33 பேர் பலியாகினர்.
பிகார் மாநிலத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களகாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின்போது ஏற்படும் மின்னால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களில் பெரும்பாலனோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆவர்.
புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் மின்னல் பாய்ந்து மாநிலத்தில் 33 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் மின்னல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனித மலம் கலப்பு: 3 பேர் கைது
அதேசமயம் மின்னல் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு இழப்பீடும் அறிவித்துள்ளது. இதனிடையே மாநிலத்தின் சில பகுதிகளில் மின்னலுடன் கூடிய அதிக மழை இன்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகாரில் மின்னல் பாய்ந்து 2024-ல் 243 பேரும் அதற்கு முந்தைய ஆண்டு 275 பேரும் பலியாகினர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.