செய்திகள் :

பிக் பாஸ் 8: பழைய போட்டியாளர்களுக்கு விஜய் சேதுபதி கொடுத்த பதில்!

post image

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பழைய போட்டியாளர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்துள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும் சரியாக 9 நாள்களே உள்ளன.

பிக் பாஸ் வீட்டில் 24 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் டிக்கெட் டூ ஃபினாலே வெற்றியின் மூலம் நேரடியாக இறுதிப் போட்டிக்கு ரயான் முன்னேறியுள்ளார். எஞ்சியுள்ள 7 போட்டியாளர்களில் 4 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நிகழ்ச்சியை சுவாரசியமாக்கும் வகையில் முன்னாள் போட்டியாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

வார இறுதி நாளில் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவது வழக்கம். அந்தவகையில் இந்த வாரத்தில் பழைய போட்டியாளர்கள் என்னென்ன கூறி உங்கள் ஆட்டத்தை திசைதிருப்பினார்கள் என 8 போட்டியாளர்களிடம் கேட்டார்.

இதற்கு ஜாக்குலின், தீபக், ரயான், முத்துக்குமரன் ஆகியோர் ரவீந்தரைக் குறிப்பிட்டு சுட்டிக்காட்டினர்.

வெளியே இருந்துவிட்டு வந்ததால் என்னுடைய பார்வை எனக் கூறி ஆட்டத்தை திசை திருப்பியதாகவும், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவது போட்டிக்கு ஆரோக்கியமானது என்றும் ஆட்டத்தை திசை திருப்பியதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் ரவீந்தரிடம் பேசிய விஜய் சேதுபதி, இவர் பெட்டியை எடுக்க வேண்டும்; இவர் விட்டுக்கொடுக்க வேண்டும் எனக் கூறி ஏன் ஆட்டத்தை திசை திருப்புகிறீர்கள் எனக் கேள்வி கேட்டார்.

வெளியே இருந்துவிட்டு வந்த உங்களுக்கு இது இரண்டாவது வாய்ப்பு, இதனை நீங்கள் பயன்படுத்தி ஆட்டத்தில் எவ்வாறு வெல்வது என கவனம் செலுத்துவதை விட்டு, ஆட்டத்தைக் கெடுப்பது நியாயமா? என ரசிகர்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: முத்துக்குமரனை விமர்சித்த விஜய் சேதுபதி!

நடிகர் அஜித் குமாருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

அஜித் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். துபையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி, மூன்றாவது இடம்பிடித்து ... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 அறிவிப்பு டீசர் தேதி!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் வெற்றி... துள்ளிக்குதித்த அஜித்!

நடிகர் அஜித் குமாரின் அணி கார் பந்தயத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.துபையில் நடைபெற்று வரும் 24H சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியாவிலிருந்து அஜித் குமார் ரேசிங் என்கிற பெயரில் நடிகர் அஜித் குமார் தன... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: முத்துக்குமரனை விமர்சித்த விஜய் சேதுபதி!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரனை நடிகர் விஜய் சேதுபதி விமர்சிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அடுத்த வாரத... மேலும் பார்க்க