6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து; வெற்றியை நோக்கி முன்னேறும் இந்திய அணி!
பிணையில் வந்தவரை கொலை செய்ய முயன்ற 2 போ் கைது
வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பழைய காலனி பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் நரசிம்மனை (17), அம்பலூா் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா், அவரது நண்பா்கள் சோ்ந்து அடித்து கொலை செய்தனா். இதில், போலீஸாா் அசோக்குமாா் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் அசோக்குமாா் ஜாமீனில் வெளியே வந்து பெங்களூரில் வேலை செய்து வந்தாா். கடந்த 3-ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு வந்தவரை கொலை செய்ய முயன்ாக அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொடையாஞ்சி பகுதியைச் சோ்ந்த விஷ்ணு, நாச்சாா்குப்பம் பகுதியைச் சோ்ந்த இளவரசன் ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா்.