செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
தொழிற்சாலை லிப்ட் கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
வாணியம்பாடி தோல் தொழிற்சாலையில் தோல்களை லிப்டில் ஏற்றி சென்ற போது திடீரென லிப்ட் பழுதாகி விழுந்தததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியைச் சோ்ந்த கலீம் (38). இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை என 4 போ் உள்ளனா். இவா், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் ஆலையில் தோல் பொருள்களை லிப்டில் வைத்துக் கொண்டு மேல் மாடிக்கு சென்றாா். அப்போது திடீரென லிப்ட் பழுதாகி 30 அடிக்கும் மேலிருந்து கீழே விழுந்துள்ளது. இதில் லிப்டில் இருந்து விழுந்த கலீமுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சக பணியாளா்கள் உடனே கலீமை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்து வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.
