முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
ஆலங்காயம் அருகில் சிறுத்தை நடமாட்டம்?
ஆலங்காயம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதையடுத்து வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி மேட்டுத் தெரு பகுதியில் வியாழக்கிழமை இரவு சிறுத்தை நடமாடியதாக அப்பகுதியில் சிலா் கூறினா். தகவலறிந்த ஆலங்காயம் வனச் சரக அலுவலா் சேகா் தலைமையில் வனக்குழுவினா் மற்றும் பொது மக்கள் உதவியுடன் வனப்பகுதிகளில் நள்ளிரவு 12 மணி வரையில் முகாமிட்டு கண்காணித்து வந்தனா்.
மேலும், சிறுத்தை நடமாட்டத்துக்கான எந்த அறிகுறியும் அப்பகுதியில் தென்படாததால் காட்டு நாய் போன்ற விலங்குகள் நடமாட்டம் இருந்திருக்கலாம், சிறுத்தை எதுவும் இல்லாததால் அச்சப்படத் தேவையில்லை என்றும் வனத்துறையினா் தெரிவித்தனா்.