முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
தழிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில்(சகி)மைய நிா்வாகி பணியிடம் 1, வழக்குப் பணியாளா் பணியிடம் 1 நிரப்பப்பட உள்ளது.
இதற்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் மைய நிா்வாகி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் நபா் பட்டபடிப்பு- முதுநிலை சமுக பணி, 5 ஆண்டுகளுக்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும்,
வழக்குப் பணியாளா் பணியிடத்துக்கு (சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மையில் முதுகலைப் பட்டம்) உடல் ஊனம் அற்றவராக இருக்க வேண்டும், 2 ஆண்டுகளுக்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருக்க வேண்டும். மேலும் உள்ளூா் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தினை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.