டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்... அஸ்வின் நகைச்சுவைப் பதிவு!
பிபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி!
பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி முதல்முறையாக பிபிஎல் (வங்கதேச பிரீமியர் லீக்) தொடரில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் ஃபார்ட்யூன் பரிஷல் அணிக்காக வரவிருக்கும் சீசனில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ஆவது பிபிஎல் தொடர் வரும் டிச.30ஆம் தேதி தொடக்குகிறது. இதில் ஜன.15 வரை விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது.
24 வயதாகும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 31 சர்வதேச டெஸ்ட்டில் 116 விக்கெட்டுகளும் 57 ஒருநாள் போட்டிகளில் 113 விக்கெட்டுகளும் 75 டி20களில் 100 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
பிபிஎல் தொடரின் முதல் 5 போட்டிகளில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி விளையாடவிருக்கிறார்.
ஃபார்ட்யூன் பரிஷல் அணியில் கைல் மேயர்ஸ், டேவிட் மலான், முகமது நபி, ஃபஹீம் அஸ்ரஃப், அலி முகமது, ஜகந்நாத் கான், ஜேம்ஸ் ஃபுல்லர், பதும் நிசங்கா, ஆண்ட்ரே பர்கர் ஆகியோரும் நேரடியான ஒப்பந்தத்தில் விளையாடவிருக்கிறார்கள்.
இந்த அணியில் வங்க தேச வீரர்களான தமிம் இக்பால், டவ்ஹித் ஹிரிதோய், முஷ்ஃபிகுர் ரஹிம், மஹ்மதுல்லா ரியாத், தன்வீர் இஸ்லாம், நஸ்முல் ஹைசைன் ஷாண்டோ, ரிபோன் மோன்டோல், நயீம் ஹாசன், ரிஷாத் ஹொசைன், டைஜுல் இஸ்லாம் ஆகியோரும் இருக்கிறார்கள்.
பிபிஎல் தொடரில் 7 அணிகள் விளையாடுகின்றன. டிச.30 - பிப்.7ஆம் தேதிவரை இந்தப் போட்டிகள் நடைபெறும்.
சா்கேரிபீல்ட் சோபா்ஸ் விருது ஏற்படுத்தப்பட்டபின் முதன்முறையாக இந்த விருதினைப் பெற்ற பாகிஸ்தான் வீரா் என்ற சிறப்பையும் ஷாஹீன் ஷா பெற்றறுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
காயம் காரணமாக பல முக்கியமான போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடாமல் போனது அவருக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் அணிக்கும் துரதிஷ்டமானது என வர்ணனையாளர்கள் பலரும் கூறியுள்ளார்கள்.
24 வயதில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் 329 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.