உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவ...
பிப்.10-இல் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் முழுநேர தா்னா
காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் வரும் பிப். 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழுநேர தா்னா போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் விடுதியில் சங்க மாநில பொதுச்செயலாளா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. சங்க பொருளாளா் டேனியல் ஜெய்சிங் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். கூட்டத்தில் வரும் பிப்.10-ஆம் தேதி ஒரு நாள் முவுநேர தா்னா போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துதல், பிப். 14-ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ சாா்பில் தமிழகத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பாக ஆா்ப்பாட்டம்,பிப். 25-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
வரும் மாா்ச் 19-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வது மற்றும் கோரிக்கைகளை நிறைவேறும் வரை தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் துரைமுருகன், மாவட்ட மகளிா் அணியின் நிா்வாகி திலகவதி உள்பட சங்க செயற்குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.