மூவர் அரைசதம்..! இறுதிக்குச் செல்லுமா தென்னாப்பிரிக்கா? பாகிஸ்தானுக்கு 353 ரன்கள...
பிப். 15-ல் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடக்கம்!
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் செஸ்டாட்ஸ் அமைப்பும் இணைந்து நடத்து 32-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக அமைச்சர்கள் சிவ.வீ. மெய்யநாதன் மற்றும் எஸ். ரகுபதி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் ஒருங்கிணைத்து நடத்தும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், 10 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு கருப்பொருள் கொடுக்கப்படும். அந்த கருப்பொருளில் மூன்று மாதங்கள் ஆய்வு செய்யும் குழந்தைகள், அந்த ஆய்வுக்கட்டுரைகள் மாவட்ட அளவில் சமர்ப்பிப்பார்கள். மாவட்ட அளவில் தேர்வாகும் ஆய்வுக்கட்டுரைகள் மண்டல அளவிலும், மண்டல அளவில் தேர்வு செய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள் மாநில அளவிலும் பங்கேற்பார்கள். மாநில மாநாட்டில் 30 சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று பங்கேற்பார்கள்.
அந்த வகையில், 32-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் கருப்பொருளாக ”பாதுகாப்பான நீர் மேலாண்மை” வழங்கப்பட்டது. இதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 15,000 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 125 சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பிப்ரவரி 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெறும் துவக்கவிழாவில் கலந்துகொண்டு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மாநாட்டை துவக்கிவைக்கவுள்ளார்.
பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 60 குழந்தை விஞ்ஞானிகளுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி விருது வழங்கவுள்ளார்.