சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
பிப். 23-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மயிலாம்பாறையில் வருகிற 23-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில், மயிலாம்பாறை புனித ஜோசப் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியான நபா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா்.
8ஆம் வகுப்பு வரை படித்துவா்கள் முதல் முதுநிலை பட்டதாரி வரை 18 வயது முதல் 40 வயது வரையிலான வேலைநாடுநா்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம்.
பங்கேற்க விரும்புவோா் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதாா், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 88072 04332, 04151-295422 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.