செய்திகள் :

``பிரச்னை என்றால் எங்களிடம் வருகிறார்கள்; ஓட்டுப்போடும்போது..!’ - ராஜ் தாக்கரே புலம்பல்

post image

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. இத்தோல்வி ராஜ் தாக்கரேயை மிகவும் பாதித்து இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முயன்றார். ஆனால் முடியாமல் போய்விட்டது. சிவசேனா உடையும் வரை தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக்கொண்டு அதில் சென்று கொண்டிருந்த ராஜ்தாக்கரே சிவசேனா உடைந்த பிறகு பா.ஜ.கவிடம் ஒட்டிக்கொள்ளலாம் என்று கணக்குப்போட்டு காய் நகர்த்தினார். ஆனால் ஏற்கனவே பா.ஜ.க கூட்டணியில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகியவை இருப்பதால் ராஜ் தாக்கரேயிக்கு பா.ஜ.க முக்கியத்துவம் கொடுக்க யோசிக்கிறது.

தற்போது அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறோம் என்று ராஜ் தாக்கரேயிடம் பா.ஜ.க கூறி இருக்கிறது. ராஜ் தாக்கரேயும், அவரது கட்சி தொண்டர்களும் தீவிர அரசியலில் ஈடுபடக்கூடியவர்கள். ஏதாவது பிரச்னை என்றால் உடனே களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடியவர்கள். எனவே பொதுமக்கள் எந்தப்பிரச்னையாக இருந்தாலும் உடனே ராஜ் தாக்கரேயின் உதவியை நாடுவது வழக்கம். ராஜ்தாக்கரேயும் ஆளும் கட்சி தலைவர்களிடம் பேசி தீர்த்துக்கொடுப்பார். இது குறித்து ராஜ் தாக்கரே ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,''கடந்த 25 ஆண்டில் மும்பை பெரிய அளவில் மாறிவிட்டது. ஆனாலும் மராத்தி மக்கள் வேலை வாய்ப்பு விவகாரத்தில் இன்னும் பாதுகாப்பற்ற முறையில்தான் இருக்கின்றனர்.

இளம் தலைமுறைக்கு வேலை கிடைக்காமல் இருக்கிறது. ஆனால் வெளியில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் வேலை கிடைக்கிறது. வேலையில்லாதவர்கள் இந்த சாதி என்று இல்லை, ஆனால் அந்த சாதியை அவர்கள் உணரவைத்து, சாதிகளுக்கு இடையே மோதல்களைத் தூண்டுகிறார்கள். விவசாயிகள் முதல் ஏழைகள் வரை அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கையும் விலையேற்றத்தால் சீரழிந்து வருகிறது. அனைத்து பிரச்னைகளின் போதும், மக்கள் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவை தேடி வருகிறார்கள். ஆனால் வாக்களிக்கும் நேரத்தில் கட்சியை மறந்து விடுகிறார்கள். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். கட்சிக்கு விரைவில் சரியான பாதையை காட்டுகிறேன்” என்று கூறினார்.

Assam: காண்டாமிருகத்தைக் காணச் சென்றபோது விபரீதம்; வீடியோ வைரலானதால் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் காண்டாமிருகம் உட்பட ஏராளமான வனவிலங்குகள் இருக்கின்றன. இங்குத் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பாதுகாப்பான ஜீப்க... மேலும் பார்க்க

Prashant Kishor: கிச்சன், படுக்கை, ஏ.சி-யுடன் கூடிய சொகுசு வேன்; பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரத சர்ச்சை!

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இப்போது பீகாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பீகாரில் கடந்த மாதம் 13-ம் தேதி அரசு பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் முறைகேடு நடந்ததாக... மேலும் பார்க்க

"வழி தவறிய எருமை எந்த மாநிலத்துக்குச் சொந்தம்?" - கர்நாடகா, ஆந்திர எல்லையில் பதற்றம்; பின்னணி என்ன?

கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையில் இருக்கும் கிராமங்கள் பொம்மநஹால் மற்றும் மெதெஹல். இதில் மொம்மநஹால் கிராமம் கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்திற்குள் இருக்கிறது. இந்த இரண்டு கிராமத்திற்கு இடையே ஒரு ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: DMK அமைச்சர் வீட்டில் ரெய்டு `டு' மோடி காஸ்ட்லி கிஃப்ட்; இந்த வார கேள்விகள்!

திமுக அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு, அமெரிக்க அதிபரின் மனைவிக்கு பிரதமர் மோடி இந்தியா சார்பில் அளித்த விலையுயர்ந்த வைரம், டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை என இந்த வாரத்தில் பல்வேறு முக்கி... மேலும் பார்க்க

ஃபேஸ்புக் காதலுக்காக எல்லை தாண்டிய இந்திய வாலிபர்... திருமணம் செய்ய மறுத்த பாகிஸ்தான் பெண்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காதலுக்காக ஆண்களும், பெண்களும் எல்லை தாண்டுவது வழக்கமாக நடந்து வருகிறது. சில நேரங்களில் அக்காதல் வெற்றிகரமாக அமைந்து விடுகிறது. சில நேரங்களில் காதலன் அல்லது காதலிக்காக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: வேகத்தடை மீட்டுக்கொடுத்த உயிர்? - நடந்தது என்ன?

இறந்ததாக அறிவிக்கப்பட்டவர்கள் சிலநேரங்களில் உயிரோடு எழுவதுண்டு. மகாராஷ்டிராவில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மாவட்டம் கசபா என்ற இடத்தை சேர்ந்தவர் பாண்டு... மேலும் பார்க்க