பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி
பிரதீப் ரங்கநாதனின் புதிய பட பெயர்!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
லவ் டுடே, டிராகன் படங்களின் வெற்றியால் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். இரண்டு படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்ததால் வணிக ரீதியாகவும் பெரிய இடத்திற்குச் சென்றுள்ளார்.
அடுத்ததாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அவரது 4-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்திற்கு டியூட் (dude) எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நாயகனாகும் சிவாஜி பேரன்!