செய்திகள் :

பிரபல ராப் பாடகர் பாட்ஷா மீது வழக்கு!

post image

பிரபல ராப் பாடகரான பாட்ஷாவின் மீது பஞ்சாப் மாநில காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாலிவுட் திரையுலகில் தனது ராப் பாடல்கள் மூலம் ரசிகர்களைப் பெற்றவர் பாடகர் பாட்ஷா (எ) ஆதித்யா பிரதீக் சிங் (வயது 39). இவர், தற்போது வெளியிட்டுள்ள ‘வெல்வட் ஃப்ளோ’ எனும் புதிய பாடலில் இடம்பெற்றுள்ள சொற்கள் மிகப் பெரியளவில் சர்ச்சையாகியுள்ளது.

அந்தப் பாடலில் அவர் ‘பைபிள்’ மற்றும் ‘சர்ச்’ உள்ளிட்ட கிறுஸ்துவ மதம் சம்பந்தமான சொற்களை அவமதிக்கும் வகையில் இணைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு எதிராக பல்வேறு கிறுஸ்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், குளோபல் கிறிஸ்டியன் ஆக்‌ஷன் கமிட்டி எனும் அமைப்பின் பிரதிநிதியான இமானுவேல் மசிஹ் என்பவர் ராப் பாடகர் பாட்ஷா கிறிஸ்துவ மக்களின் மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி பட்டாலா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று (ஏப்.29) கிறுஸ்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரூ.100 கோடி வசூலித்த துடரும்!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித் குமார்!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நடிகர் அஜித் குமார், வீடு திரும்பினார். திடீர் உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித் குமார் இன்று... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முனோட்ட விடியோ!

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், ய... மேலும் பார்க்க

பிரேமலு பிரபலங்கள் நிறைந்த ’ப்ரோமான்ஸ்’-ன் ஓடிடி வெளியீடு!

‘ப்ரோமான்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநர் அருண் டி. ஜோஸ் இயக்கத்தில் நடிகர்கள் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், ஷியாம் மோஹன் மற்றும் மஹிமா ந... மேலும் பார்க்க

ஒசாகா திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக அஜித், லியோ படத்துக்கு 6 விருதுகள்!

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் அஜித், த்ரிஷாவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2005ஆம் ஆண்டுமுதல் விருதுகளை வழங்கி வருகின்றன. தற்போத... மேலும் பார்க்க