கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
பிரபு தேவா, வடிவேலு நடிப்பில் புதிய படம்!
நடிகர்கள் பிரபு தேவா, வடிவேலு கூட்டணியில் உருவாகும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபு தேவா இந்தியளவில் அறியப்படும் நடிகர், இயக்குநராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பகீரா கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதே நேரம், நடிகர் வடிவேலு மாமன்னன் வெற்றிக்குப் பின் கேங்கர்ஸ் படத்திலும் கவனம் ஈர்த்திருத்திருந்தார். அடுத்ததாக, ஃபஹத் ஃபாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், நடிகர்கள் வடிவேலு, பிரபு தேவா இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை, சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் சோம்பி (zombie) கதையாக உருவாகவுள்ளது.
இதையும் படிக்க: விக்ரமின் அடுத்த படம் இதுதான்!