செய்திகள் :

பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!

post image

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 19) தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

இதில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது,

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பேசியது மிகவும் மகிழ்ச்சிகரமானது. இதில் இந்தியா - பிரிட்டன் இடையிலான உறவு, அதனை பேணி பராமரிக்கும் அர்ப்பணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது. அத்துடன் காமன்வெல்த், காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம் என மோடி பதிவிட்டுள்ளார்.

நெதர்லாந்து பிரதமர் டிக் ஷூஃப் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த பணியாற்ற உறுதி எடுத்துக்கொண்டனர்.

உச்சம் தொட்ட தங்கம் இறக்குமதி: தரவுகளை மறு ஆய்வு செய்யும் அரசு

கடந்த நவம்பா் மாதம் இந்தியாவின் தங்கம் இறக்குமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதைத் தொடா்ந்து, இது தொடா்பான தரவுகளை மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்யவுள்ளது. இது குறித்து அமைச... மேலும் பார்க்க

அம்பேத்கா் குறித்த அமித் ஷா உரையை நீக்க எக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் மாநிலங்களவை உரையின் விடியோ பதிவை நீக்குமாறு சமூக ஊடகமான ‘எக்ஸ்’ நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது என காங்கிரஸ... மேலும் பார்க்க

இறுதிக் கட்டத்தில் ஸ்பே டெக்ஸ் ஆய்வுத் திட்டம்

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்புவதற்கான முன்னோட்ட முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ள ஸ்பேடெக்ஸ் ஆய்வுத் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி அந்த விண்கலன்கள் பெங்களூரில் வடிமைக்கப்பட்டு, ஆந்திர ம... மேலும் பார்க்க

வங்கதேச நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் -நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

வங்கதேச அரசியல் சூழல், ஹிந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல் தொடா்பான நிலவரங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி -தன்கருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிப்பு

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கக் கோரி அவருக்கு எதிராக தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸை நிராகரித்து, மாநிலங்களவை துணைத் தலைவ... மேலும் பார்க்க

தொடா் உண்ணாவிரதம்: விவசாய சங்க தலைவா் உடல்நிலை கவலைக்கிடம்

கடந்த 24 நாள்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா். ... மேலும் பார்க்க