செய்திகள் :

பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு!

post image

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன் என்று தில்லி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறா பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில், கல்காச்ஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதிஷியை எதிர்த்து பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார். இவர் இதற்கு முன்னர் 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார்.

ரமேஷ் பிதுரி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று பேசுகையில், “பிகார் மாநில சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று லாலு உறுதியளித்தார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஓக்லா மற்றும் சங்கம் விஹார் பகுதிகலிலுள்ள சாலைகளை உருவாக்கியதைப் போன்று கல்காஜி தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று உறுதியளிக்கிறேன்" எனப் பேசியிருந்தார்.

இதையும் படிக்க | வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!

பிரியங்கா காந்தி குறித்த அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் தளப் பதிவில், “பிரியங்கா காந்திக்கு எதிரான ரமேஷ் பிதுரியின் கருத்து மிகவும் வெட்கக்கேடானது. இதுதான் பாஜகவின் உண்மை முகம். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பேச்சுமற்றும் சிந்தனையின் தந்தையே பிரதமர் மோடிதான். அவரே, பெண்களுக்கு எதிராக 'மாங்கல்யம்' மற்றும் 'முஜ்ரா' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார். இந்த மோசமான பேச்சுக்காக ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க | செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமா்

ரமேஷ் பிதுரிக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “இந்த தவறான நடத்தை ரமேஷ் பிதுரி என்ற மலிவான மனிதனின் மனநிலையை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவருடைய உரிமையாளர்களின் யதார்த்தத்தை வெளிக்காட்டுகிறது. பாஜகவின் இத்தகைய கீழ்த்தரமான தலைவர்களின் மூலம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மதிப்பினை நீங்கள் கண்டுகொள்ளலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மலப்புரம்: தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை; மிரண்டு ஓடிய 21 பேர் காயம்!

கேரளத்தின் மலப்புரத்தில் திருவிழாவின் போது, அழைத்து வரப்பட்ட யானைக்கு மதம் பிடித்தது. அதைக்கண்டு மிரண்டு ஓடியதில் 21 பேர் காயமடைந்தனர்.கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் திரூர் பகுதியில் உள்ள பிபி அங்க... மேலும் பார்க்க

நெல்லியம்பதி பகுதியில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

நெல்லியம்பதி படகிரி தோட்ட குடியிருப்புப் பகுதிகளில் புலி நடமாட்டம் இருப்பதால் மலைக் கிராமத்தினர் அச்சமடைந்தனர். கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் நெல்லியம்பதி படகிரி தோட்ட பகுதியில் பெரும்பான்மையோர் ... மேலும் பார்க்க

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். தற்போதைய ... மேலும் பார்க்க

2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.உடுப்பி ம... மேலும் பார்க்க

மாசுபாட்டை குறைக்கும் "பிஎஸ் 7'-ஐ அறிமுகப்படுத்த காலக்கெடு: மாநில அரசுகளுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கை செயல்பாட்டை விரைவுபடுத்தவும்; மாசுபாட்டை குறைக்கும் பாரத் நிலை-7 (பிஎஸ் -7) அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு வகுக்க மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதா... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் சரிதான்: தலைமைத் தேர்தல் ஆணையர்

நமது நிருபர்வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.மேலும், முழுமையான ஆவணங்கள், கள சரிபார்ப்பு மற்றும் சம்பந்த... மேலும் பார்க்க