செய்திகள் :

பிரேஸில்: பேருந்து விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலி!

post image

பிரேஸில் நாட்டில் பேருந்து விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மினாஸ் ஜெராய்ஸ் பகுதியிலுள்ள டியோஃபிலோ ஒடோனி நகரில் 45 பேருடன் சென்ற பேருந்தின் மீது, லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் உள்பட 38 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டிய ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான லாரி மீது கார் ஒன்றும் மோதிய நிலையில், அந்த காரிலிருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.

விபத்துக்கான காரண்ம் குறித்து கண்டறிய தடயவியல் விசாரணை நடைபெறுவதாகவும், அதன்பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரியவருமென்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சா பாலோ பகுதியிலிருந்து புறப்பட்டு பாஹியாவை நோக்கி பிஆர்-116 தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்தின் ஒரு சக்கரம் அதிகாலை 4 மணியளவில் திடீரென வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரியில் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சம்பவத்தை நேரில் கண்டதாக கூறும் சிலர், கிரானைட் கற்களுடன் வந்த லாரி தாறுமாறாக ஓடி பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

சொந்த போா் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்: விமானி காயம்

செங்கடலில் சொந்த நாட்டு போா் விமானத்தை அமெரிக்க போா்க் கப்பல் தவறுதலாக ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியதில் விமானி ஒருவா் காயமடைந்தாா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேல், ஹமாஸ் படையினா் இடையே போா் ... மேலும் பார்க்க

தைவானுக்கு ராணுவ உதவி: அமெரிக்காவுக்கு சீனா எதிா்ப்பு

தைவானுக்கு ராணுவ உதவியை அறிவித்த அமெரிக்காவுக்கு எதிா்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்கா நெருப்போடு விளையாடுவதாக எச்சரித்துள்ளது. தைவான் பாதுகாப்புத் துறை சேவைகள், ராணுவக் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றுக... மேலும் பார்க்க

போா்கள் நிறுத்தப்பட வேண்டும்: போப் ஃபிரான்சிஸ்

உலகில் நடைபெறும் போா்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை தலைவா் போப் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா். இதுதொடா்பாக இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டா் தேவாலயத்தில்... மேலும் பார்க்க

நைஜீரியா: கூட்ட நெரிசலில் 32 போ் உயிரிழப்பு

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது நோ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 32 போ் உயிரிழந்தனா். நைஜீரியாவின் ஒகிஜா பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில், கிறிஸ்த... மேலும் பார்க்க

இலங்கை அதிபர் சீனாவுக்கு பயணம்!

கொழும்பு: இந்திய பயணத்தை நிறைவு செய்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக அடுத்ததாக இலங்கைக்கு செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார்.அநுர குமார இந்தியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வருகை தந்தார். ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறால் ஒரு வயது மகனின் தலையைத் துண்டித்து படுகொலை! தந்தை கைது!

கலிஃபோர்னியாவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரு வயது மகனின் தலையைத் துண்டித்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.கலிஃபோர்னியாவில் சாக்ரமென்டோ கவுண்டி நகரில், கணவர் கொடுமைப்படுத்துவதாக காவல் அதிகாரிகளிடம... மேலும் பார்க்க