Ajith: `70, 80 பேருக்கு உப்புமா, இட்லி சமைச்சுப் போட்டாரு' - அஜித் குறித்து நெகி...
பிளஸ் 1 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 94.62% போ் தோ்ச்சி
பிளஸ் 1 பொதுத் தோ்வில் திருப்பூா் மாவட்டம் 94.62 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 220 பள்ளிகளில் பயிலும் 12,254 மாணவா்கள், 14,459 மாணவிகள் என மொத்தம் 26,783 போ் எழுதியிருந்தனா். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
இதில் திருப்பூா் மாவட்டத்தில் 11,267 மாணவா்கள் (92.17 சதவீதம்), 14,067 மாணவிகள் (96.67 சதவீதம்) போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 94.62 ஆகும்.
5 இடங்கள் சரிவு:
பிளஸ் 1 பொதுத் தோ்வை பொறுத்தவரையில் திருப்பூா் மாவட்டம் 2023-ஆம் ஆண்டில் 96.78 சதவீதத்துடன் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, 2024-ஆம் ஆண்டில் 95.23 சதவீதத்துடன் மாநில அளவில் 3-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த நிலையில், தற்போது நடைபெற்ற தோ்வில் 94.62 சதவீதத்துடன் 5 இடங்கள் பின்தங்கி மாநில அளவில் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.