செய்திகள் :

பிளஸ் 2 துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

post image

பிளஸ் 2 துணைத்தேர்வு கால அட்டவணையை அரசு தோ்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணைத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.

இந்நிலையில், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 25 ஆம் தேதி மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஜூன் 26 ஆம் தேதி ஆங்கில பாடத் தேர்வும், ஜூன் 28 ஆம் தேதி முதல் இதரப்பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெறவுள்ளன.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நேற்று(மே 8) வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 7,53,142 மாணவ, மாணவிகள் (95.03 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர்.

இதையும் படிக்க: பொதுத் தேர்வு முடிவுகள்: நேரடி மறுகூட்டல் விண்ணப்பம் ரத்து!

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தொழில் ஒப்பந்தங்கள்முதல்வர் ஸ்டாலினின் தொடர் முயற்... மேலும் பார்க்க

உழைப்பு, விசுவாசத்துக்கு அதிமுகவில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது: ரகுபதி பதில்!

அதிமுகவில் அப்போது என்னுடைய உழைப்புக்கும் விசுவாசத்துக்கும்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார் மாநில இயற்கை வளத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.... மேலும் பார்க்க

அன்னையர் நாள்: முதல்வர் ஸ்டாலின், விஜய் வாழ்த்து!

அன்னையர் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், ”மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அ... மேலும் பார்க்க

என்எல்சி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து!

நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்க மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தால் அ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு

ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தின... மேலும் பார்க்க

சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டதா? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு, கழிவுநீா் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா?, வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு,... மேலும் பார்க்க