”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்; போல...
பிளஸ் 2 துணைத் தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தோ்வு ஜூன் 25-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கு புதன்கிழமை (மே 14) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், 95.03 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். இந்நிலையில், பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் தோ்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வு எழுத விருப்பம் உள்ள தனித்தோ்வா்கள் மற்றும் பள்ளி மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவா்கள் புதன்கிழமை (மே 14) முதல் மே 29-ஆம் தேதிக்குள் அவரவா் படித்த பள்ளிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். தனித்தோ்வா்கள், கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்குச் சென்று தோ்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கத் தவறியவா்கள் மே 30, 31 ஆகிய தேதிகளில் தத்கால் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு, தோ்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ. 1,000 செலுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டாம்.
விரிவான தோ்வு கால அட்டவணை, கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை https://www.dge.tn.gov.in/ இணையதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம்.விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை மாணவா்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்திதான் நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.