செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.70%

post image

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார். இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே: அன்பில் மகேஸ்

சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் இன்று காலை முடிவுகளை வெளியிட்டார்.

தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு எழுதிய மொத்தப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 7,92,494 பேர்களில் 4,19,316 மாணவிகளும், 3,73,178 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகயளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களில் 3,47,670(93.16%), மாணவிகளில் 4,05,472(96.70%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தாண்டு அரசுப் பள்ளிகள் 91.94 சதவிகிதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 95.71 சதவிகிதம், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்

கூவாகம் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் த... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைந்ததால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிர... மேலும் பார்க்க

சேலத்தில் தம்பதி வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை

சூரமங்கலம்: சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: 91,414 பேர் விண்ணப்பம்!

பொறியியல் கலந்தாய்வுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 91 ஆயிரத்து 414 பேர் க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

புதுதில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால், வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் ம... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடி: 8 மாநிலங்களில் 42 இடங்களில் சிபிஐ சோதனை

இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 8 மாநிலங்களில் 42 இடங்களில் ‘ஆபரேஷன் சக்ரா 5’ என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க