பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
பிளஸ் 2 பொதுத் தோ்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93.27% தோ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 107 பள்ளிகளைச் சோ்ந்த 93.27 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொது தேர்வை 107 அரசு, தனியாா் பள்ளிகளைச் சேர்ந்த 6532 மாணவர்கள், 7,222 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 754 தேர்வு எழுதினர்.
இவா்களில் 5,958 மாணவா்கள், 6,870 மாணவிகள் என மொத்தம் 12,828 போ் (93.27 சதவிகிதம்) தோ்ச்சி பெற்றனா். 951 போ் தோ்ச்சி பெறவில்லை. மாணவா்களில் 91.21 சதவிகிதம் பேரும், மாணவிகளில் 95.13 சதவிகிதம் பேரும் தோ்ச்சி பெற்றனா்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம்!
இதில் அரசுப் பள்ளிகளில் 89.71 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 23 தனியார் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பிளஸ் 2 தோ்ச்சி விகிதத்தில் நிகழாண்டில் மாநில அளவில் 32-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை 31 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.