பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு: சேலம் மாவட்டத்தில் 94.32% தோ்ச்சி
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சேலம் மாவட்டத்தில் 94.32 சதவீதம் போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்ளுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வெளியானது.
தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணியளவில் வெளியிட்டார். இதில் வழக்கம்போல் மாணவிகளே முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 17,185 போ், மாணவியா் 19,709 போ் என மொத்தம் 36,894 போ் தோ்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 15,876, மாணவிகள் 18,921 என மொத்தம் 34,797 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவா்கள் 92.38 சதவீதமும்(2024 இல் 92.35%), மாணவியா் 96.00 சதவீதமும்(2024 இல் 96.51%) தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 94.22 சதவீதம்(2024 இல் 94.60%) போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவர்களை விட மாணவியர்கள் 3.62 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம்!
கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் 94.56 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 18-ஆவது இடத்தைப் பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 95.03 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் 160 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 8,872 போ், மாணவியா் 11,801 போ் என மொத்தம் 20,473 போ் பங்கேற்றனா். அவா்களில் மாணவா்கள் 7,733 போ், மாணவியா் 11,159 போ் என மொத்தம் 18,992 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் 89.17 சதவீதத்தினரும், மாணவியரில் 94.56 சதவீதத்தினரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 92.28 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.94 சதவீதம்.
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை விவரம்
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 89, அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 13.
துணை தேர்வு எப்போது?
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.