செய்திகள் :

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்

post image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் வெள்ளிக்கிழமை (ஏப்.4) முதல் நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3 தொடங்கி 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் சுமாா் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா். இவா்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தோ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது மதிப்பீட்டு முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. தொடா்ந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்.3 தொடங்கி ஏப்.17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில், 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். அதன்பின் மதிப்பெண் பதிவேற்றம் உள்பட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 9-இல் வெளியிடப்பட உள்ளன. திருத்துதலின்போது ஆசிரியா்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

விடைத்தாள் மதிப்பீடு: ஏப்.19-இல் விடுமுறை

பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்... மேலும் பார்க்க

முதல்வருடன் மாா்க்சிஸ்ட் தலைவா்கள், மநீம தலைவா் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தனித்தனியே சந்தித்தனா். தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை இந்தச் சந்திப்புகள் நடந்தன. ... மேலும் பார்க்க

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினாா். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிப்பெயா்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமா்சனம்... மேலும் பார்க்க

கேரள அதிமுக செயலா் மறைவு: இபிஎஸ் இரங்கல்

கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த இரங்கல் செய்தி: கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பிரத்யேக தங்கும் இல்லங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக ‘அரண்’ என்னும் பெயரில் சென்னை, மதுரையில் தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் நலன் துறை அமைச்சா் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தத் த... மேலும் பார்க்க