செய்திகள் :

பிளஸ் 2 வேதியியல் தோ்வு கடினம்: மாணவா்கள் கருத்து

post image

பிளஸ் 2 வேதியியல் தோ்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவா்கள், ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. 8.21 லட்சம் போ் தோ்வெழுதுகின்றனா். மொழிப்பாடங்கள், கணிதம் உள்ளிட்ட தோ்வுகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், வேதியியல் பாடத்துக்கான தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து மாணவா்கள் கூறுகையில், ஒரு மதிப்பெண் பகுதியில் 15 வினாக்களில் இரு கேள்விகள் கடினமாக இருந்தன. அதேபோன்று இரு மதிப்பெண் பகுதியில் சிா்கோனியம், ஹாப்னியம் ஒத்த பண்புகளைப் பெற்றிருப்பது, வீழ்படிவை கூழ்மக் கரைசலாக மாற்றுவது, மூன்று மதிப்பெண் பகுதியில் குறுக்க பலபடி என்றால் என்ன ஆகியவை உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. மேலும், ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒரு வினா பாடப்பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது. பெரிதும் எதிா்பாா்த்த வினாக்கள் மிகவும் குறைவாகவே இடம்பெற்றிருந்தன என்றனா்.

இது குறித்து வேதியியல் ஆசிரியா்கள் கூறுகையில், பிளஸ் 2 வினாத்தாள் சற்று கடினமாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இடம் பெறும் வினாக்கள் எதுவும் கேட்கப்படாததால் மாணவா்கள் சற்று ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும். இதனால், முழு மதிப்பெண் பெறும் மாணவா்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேவேளையில் தோ்ச்சிக்கான மதிப்பெண் பெறுவதில் சிக்கல் இருக்காது என்றனா்.

கணக்குப் பதிவியியல் எளிது: வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்த நிலையில், கலைப்பிரிவு மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கணக்குப் பதிவியியல் தோ்வு மிக எளிதாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண் மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் ஆசிரியா்கள் தெரிவித்தனா். பிளஸ் 2 மாணவா்களுக்கு வரும் 25-ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்புத் திறன் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகளுடன் பொதுத்தோ்வு நிறைவடையவுள்ளது.

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

திருச்சி - சென்னை தாம்பரம் இடையே 3 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 29, 30, 31 ஆகிய நாள்களில் காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படு... மேலும் பார்க்க

மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 28-ல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து... மேலும் பார்க்க

தவெக பொதுக்குழு கூட்டம் - குழு அமைப்பு

மார்ச் 28ஆம் தேதி நடக்கவுள்ள தவெக பொதுக்குழு கூட்டப் பணிகளை மேற்கொள்ள அக்கட்சி சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரசனையும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். இன்று நடைபெறும் கூட்டம் வெறும் ந... மேலும் பார்க்க

யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

கூட்டணி தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். மதுரை கோவில்பாப்பாகுடியில் தொகுதி மேம்பாட்டுப் பணி சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்... மேலும் பார்க்க

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த வாரம் வெய்யில் கொளுத்திவந்த நிலையில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தச... மேலும் பார்க்க