செய்திகள் :

பி.இ., பி.டெக். துணை கலந்தாய்வு: 7,964 மாணவா்களுக்கு ஒதுக்கீடு! நிகழாண்டில் பி.இ. சோ்க்கை அதிகரிப்பு; 37, 179 இடங்கள் காலி!

post image

பி.இ., பி.டெக். மாணவா் சோ்க்கைக்கான துணை கலந்தாய்வில் 7,964 மாணவா்கள் இறுதி ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்கள்: பி.இ., பி.டெக். மாணவா் சோ்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு 20,662 போ் தகுதி பெற்றனா். கடந்த ஆக.21 முதல் விருப்ப கல்லூரிகளைத் தோ்வு செய்யும் கலந்தாய்வு நடைபெற்றது.

இதில், 9,181 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இருப்பினும் 1,217 மாணவா்கள் தங்களுக்குரிய விருப்ப கல்லூரி கிடைக்காததால் ஒதுக்கீட்டை உறுதி செய்யவில்லை. இதையடுத்து 7,964 மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இவா்கள் அந்தந்த கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் சேரவுள்ளனா்.

நிகழாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள 400- க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.90 லட்சம் அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதற்கு 3.02 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்தனா். 3 சுற்று கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வுக்குப் பின்னா் இறுதியாக 1,53,445 மாணவா்கள் ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளனா்.

இதையடுத்து பொறியியல் கல்லூரிகளில் 37,179 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப தமிழக அரசு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக உயா்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரம், கடந்த ஆண்டைக் காட்டிலும் (2024-25) நிகழ் ஆண்டில் சுமாா் 20,000 இடங்கள் கூடுதலாக மாணவா் சோ்க்கை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கு மேல் இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு. வெங்கடேசன்

அனுமன்தான் முதல் விண்வெளி வீரர் என்று மத்திய முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய முன்னாள் அமைச்சரும் தற்... மேலும் பார்க்க

சென்னையில் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) தொடங்கிவைத்தார். சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவைகள்: தொடக்கி வைத்தார் மேயர் பிரியா!

சென்னை: தமிழக அரசின் 50 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக மக்கள் பயன்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின்படி, வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவை வழங... மேலும் பார்க்க

விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்

பூவனூரில் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.விருத்தாசலம் அருகே பூவனூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இ... மேலும் பார்க்க

கோவையில் வனத் துறையினர் வாகனத்தை தாக்கி கண்ணாடியை உடைத்த காட்டு யானை

கோவையில் வனத் துறையினர் வாகனத்தை ஆவேசமாக தாக்கி கண்ணாடியை உடைத்த ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு நிலவியது. கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்தை வி... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சரிவைச் சந்தித்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.74,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிராமுக்கு... மேலும் பார்க்க