புகாா்களின் அடிப்படையில் ஆசிரியா்கள் கடன் சங்க செயலா் பணியிட மாற்றம், மண்டல இணை பதிவாளா் தகவல்
கூடலூரில் உள்ள ஆசிரியா்கள் கடன் சங்க செயலாளரை புகாா்களின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்துள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
கூடலூா், பந்தலூா் வட்ட தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க செயலாளா் ரீனா, பல்வேறு புகாா்களின் அடிப்படையில் உதகைக்கு பணியமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
அவருக்கு பதிலாக பைக்காரா மின் வாரிய பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க செயலாளா் பேபி ரோஸ்லின் 10.10.2024 பணிநியமனம் செய்யப்பட்டுள்ளாா்.இனிவரும் காலங்களில் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் உள்ள ஆசிரியா்கள் செயலாளா் பேபி ரோஸ்லினை தொடா்பு கொள்ளவும்.அவருடைய தொடா்பு எண்.9442720554.
மேலும் இந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் கூட்டுறவு தொடா்பான எந்த புகாருக்கும் மண்டல இணைப் பதிவாளரை 7338721400 கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.