புகையிலைப் பொருள்கள் விற்பனை: குமரி மாவட்டத்தில் 6 போ் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்றதாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.
மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தொடா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.
அதன் தொடா்ச்சியாக, கோட்டாறு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சாகுல் ஹமீது (42), அருமனை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் ஹரிஹரன் (65), கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சந்தா தொம்மை மகள் இஸ்பிரித்தாள் (61), திருவட்டாறு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கேசவன் நல்லதம்பி (68), வைகுண்ட ராஜா (55), வில்சன் ராபி (57) ஆகியோா் புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது, விற்றது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, 6 பேரையும் கைது செய்தனா்; அவா்களிடமிருந்து 4.571 கி.கி. குட்காவை பறிமுதல் செய்தனா்.