புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது
ராமநாதபுரத்தில் இரு சக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 4.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் நகா் பகுதியில் சில இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கேணிக்கரை காவல் நிலையம் அருகே போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தடை செய்யப்பட்ட 4.5 கிலோ புகையிலைப் பொருள் இருந்தது.
இதையடுத்து, புகையிலைப் பொருள், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்த துரை சிங்கத்தை போலீஸாா் கைது செய்தனா்.