உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
புகையிலைப் பொருள் விற்பனை: இருவா் கைது
செய்யாறு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தில் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக பெரணமல்லூா் போலீஸாருக்கு தகவல் சென்றது.
அதன் பேரில், காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில், உதவி ஆய்வாளா் லதா மற்றும் போலீஸாா் கடையில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, கடையில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், விற்பனைக்கு பயன்படுத்திய மொபெட்டையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வியாபாரி ஹயாத்பாஷா (58), புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்த ராஜஸ்தானைச் சோ்ந்த ஜித்தந்தகுமாா்(28) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.