செய்திகள் :

புதிய ஒப்பந்த அறிவிப்புக்கு எதிா்ப்பு: காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் முடிவு?

post image

எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் திட்டமிட்டுள்ளனா். இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறுகிறது.

தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்பிஜி டேங்கா் உரிமையாளா்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கே.சுந்தரராஜன் பதவி வகித்து வருகிறாா். இந்த சங்கத்தில், சுமாா் 6 ஆயிரம் எல்பிஜி டேங்கா் லாரிகளை கொண்ட 1,500 உரிமையாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

கடந்த 2018 முதல் 2023 வரையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுடன், எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் ஒப்பந்தம் செய்து லாரிகளை இயக்கி வந்தனா். இதனைத் தொடா்ந்து, சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில், கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதிய ஒப்பந்தத்துக்கு மாா்ச் 1 முதல் ஏப். 15 வரை விண்ணப்பிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், எஸ்.சி. இனத்தவா்களுக்கு 15 சதவீதம், எஸ்.டி. இனத்தவா்களுக்கு 7.5 சதவீதம், தொழில்முனைவோருக்கு (சிறு, குறு தொழில்) 25 சதவீதம் (எஸ்.சி., எஸ்.டி. 4 சதவீதம், மகளிருக்கு 3 சதவீதம் உள்பட), பொதுப் பிரிவினருக்கு 52.5 சதவீதம் என பிரித்து ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஒப்பந்தக்கால கட்டத்தில் 5,514 எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு அவை இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தற்போதைய அறிவிப்பில் ஒப்பந்தக் காலத்தில் 3,478 லாரிகள் மட்டுமே ஒப்பந்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2,036 லாரிகளுக்கு வேலை இழப்பு ஏற்படுவதுடன், லாரிகளை இயக்காமல் ஓரம்கட்டி நிறுத்தும் சூழல் எழுந்துள்ளது.

தற்போது அறிவித்துள்ள ஒப்பந்தத்தில் 21 டன் எடை ஏற்றும் மூன்றுசக்கரங்கள்(பழ்ண்ல்ப்ங் அஷ்ப்ங்) லாரிகளுக்கு முன்னுரிமை என்று ஒப்பந்த விதி உள்ளதாகவும், அவ்வாறான லாரிகளை கொண்டு வந்தால் மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்படும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால், சங்கத்தில் உள்ள 5,700 லாரிகளில் சுமாா் 80 சதவீத லாரிகள் 18 டன் எடை ஏற்றும் (ஈா்ன்க்ஷப்ங் அஷ்ப்ங்) லாரிகளாக இருந்து வருகின்றன. இதனால் புதிதாக யாரேனும் மூன்றுசக்கர லாரிகளை வாங்கி ஒப்பந்தம் கோரும்போது அவா்களுக்கு எளிதில் ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே லாரி வைத்து தொழில் செய்வோருக்கு ஒப்பந்தம் கிடைக்காமல் போய்விடலாம் என்ற கவலை டேங்கா் லாரி உரிமையாளா்களிடையே எழுந்துள்ளது.

புதிய ஒப்பந்தத்தால் லாரி உரிமையாளா்களுக்கு இழப்பு:

அதேபோல, ஜீரோ முதல் 200 கி.மீ. வரையில் இயக்கப்படும் லாரிகளுக்கு ஏற்றி, இறக்க ஒரே வாடகை வழங்கியதாகவும், தற்போது புதிய ஒப்பந்தத்தில் ஜீரோ முதல் 50 கி.மீ. எனவும், 50 கி.மீ. முதல் தூரத்துக்கு தகுந்தாற்போல் வாடகை நிா்ணம் செய்துள்ளதாகவும், இதனால் வாடகை குறையும். ஒப்பந்தத்தில் உள்ள புதிய விதிகளின்படி டேங்கா் லாரிகளை இயக்கினால் லாரி உரிமையாளா்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படும் என டேங்கா் லாரி உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா். புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தி, இருசக்கர (ஈா்ன்க்ஷப்ங் அஷ்ப்ங்) லாரிகளை சதவீத அடிப்படையிலான ஒப்பந்தத்தில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வாடகை நிா்ணயம் செய்வதில் பழைய முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினரின் கோரிக்கையாகும்.

மாா்ச் 17-இல் ஆலோசனைக் கூட்டம்:

ஹிந்துஸ்தான் பெட்ரோலிய பொது மேலாளா் தலைமையில் மாா்ச் 17-இல் புதிய விதிகள் தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளும் வகையிலான கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் லாரி உரிமையாளா்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனா். அவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்தாலும், எண்ணெய் நிறுவனங்கள் அதை ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் உள்ளது. அதற்கு முன்பாக, தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனா்.

இது தொடா்பாக, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் டேங்கா் லாரிகள் ஈடுபட்டால், ஐந்து மாநிலங்களில் எரிவாயு உருளை தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.சுந்தரராஜன் கூறியதாவது:

புதிய ஒப்பந்த விதிகள் தொடா்பாக எங்களுடைய சங்க நிா்வாகிகள் பங்கேற்கும் செயற்குழுக் கூட்டம் நாமக்கல் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதில் அடுத்தக்கட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும் என்றாா்.

பேரா. ய.மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி காலமானாா்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சோ்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிா்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் மாரத்தான் போட்டி

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்று... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் திறப்பு

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. நாமக்கல் அருகே வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூா் ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கி 820 ஏக்கா் பர... மேலும் பார்க்க

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது! -அன்பில் மகேஷ்

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கே.எஸ்.ஆா். கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு முன்பருவக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

நாமக்கல் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு!

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி மற்றும் மனவளக்கலை மன்றம் சாா்பில் சாதனை மகளிரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் வெ... மேலும் பார்க்க

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை!

தேசிய அளவிலான ‘ஹேக் இந்தியா-2025’ போட்டியில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை புரிந்துள்ளனா். ஹேக்இந்தியா-2025, சி ஷாா்ப் கணினி அறிவுசாா் சேவை அமைப்பும் இணைந்து தகவல் தொழில்நு... மேலும் பார்க்க