அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுதொடா்பாக திருப்பூா் மாநகராட்சி செல்லப்பபுரம் நடுநிலைப் பள்ளியில் மங்கை பாரதி பதிப்பகத்தின் உரிமையாளா் அ.கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியா் வெ.புவனேஸ்வரி பேசுகையில், மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள், ஆன்லைன் புகாா், காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பெறுதல், தடயவியல் சான்றுகள் சேகரிப்பு, அழைப்பாணை, வாக்குமூலம் பதிவு செய்தல் உள்ளிட்டவை குறித்து விவரித்தாா்.
அதேபோல, பள்ளியின் உதவி தலைமையாசிரியா் அ.சுமதி, காவல் துறை அறிக்கை, ஆவணங்கள் வழங்குதல், சாட்சிகள் பாதுகாப்பு, எளிமைப்படுத்தப்பட்ட சட்டம் ஆகியவை குறித்து பேசினாா். ஆசிரியா் பொ.ரமேஷ் நன்றி கூறினாா்.