புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கும் சூர்யா?
நடிகர் சூர்யா புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. தற்போது, இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் தன் 46-வது படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா ’ழகரம் ஸ்டூடியோஸ்’ என்கிற பெயரில் புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா. இரஞ்சித்தின் படமும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, சூர்யா 2டி எண்டர்டெயின்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், ஸ்டூடியோ கீரின் போன்ற தன் உறவினர்களின் தயாரிப்பு நிறுவங்களின் மட்டுமே நடித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நடிகர் மோகன் லாலுக்கு பிரமாண்ட பாராட்டு விழா! கேரள அரசு அறிவிப்பு!