பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமனம்!
புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் நியமித்துள்ளார்.
மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். இந்த புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு செய்யும் சிறப்புக் குழுவின் தலைவராக பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரிச் சட்டத்தில், இதுவரையில் எண்ணற்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. மேலும், அதனை புரிந்துகொள்வதும் கடினமாகிவிட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
622 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சோ்க்கப்படவில்லை. ஆனால் 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நீளமான வாக்கியங்களுக்குப் பதிலாக சிறிய வாக்கியங்களுடன் படிப்பவா் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.