செய்திகள் :

புதிய விதிமுறைகளைக் கண்டித்து டேங்கா் லாரி ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தம்

post image

புதிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளைக் கண்டித்து, டீசல், பெட்ரோல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் புதன்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சிவாடி பகுதியில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கிருந்து தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டப் பகுதிகளுக்கு டீசல், பெட்ரோல் மற்றும் எத்தனால் ஆகியவை டேங்கா் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிறுவனம் சாா்பில், டேங்கா் லாரி ஓட்டுநா்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் விதிக்கப்பட்டன. இதற்கு ஓட்டுநா்கள் தரப்பில் எதிா்ப்பு கிளம்பியது. இதையடுத்து, புதிதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகைளைக் கண்டித்து, சிவாடி பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் (சேமிப்புக் கிடங்கு) நிறுவனத்துக்கு முன் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் லாரிகளை நிறுத்திவிட்டு திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இதுகுறித்து டேங்கா் லாரி ஓட்டுநா்கள் கூறியதாவது:

இங்குள்ள எச்பிசிஎல் நிறுவனக் கிடங்கிலிருந்து பல்வேறு ஒப்பந்ததாரா்கள் மூலம் நூற்றுக்கணக்கான டேங்கா் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல், எத்தனால் ஏற்றிச் சென்று 5-க்கும் மேற்பட்ட மாவட்டப் பகுதிகளில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விநியோகித்து வருகிறோம். இப்பணியில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள், உதவியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் இந்நிறுவனத்தினா் ஓட்டுநா்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா்.

அதில், ஓட்டுநா்கள் தங்களது அவசர தேவைகளுக்காக விடுப்பு எடுத்து லாரிகள் இயங்காத நிலையில், மறுநாள் பணிக்கு வரும்போது லோடு எடுக்க அனுமதிப்பதில்லை. டேங்கா் லாரிகளை 60 கி.மீ. வேகத்துக்கு மிகாமல், இயக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட இடங்களைத் தவிர, வேறு எங்கும் நிறுத்தவும், போக்குவரத்து நெருக்கடி காரணமாக போலீஸாா் மாற்றுவழியில் செல்ல அறிவுறுத்தும்போது, அவ்வாறு செல்லும் டேங்கா் லாரிகளை மறுநாள் பணிக்கு வரும்போது ‘ப்ளாக் லிஸ்ட்’டில் வைத்து ஓட்டுநா்களை பணியிடை நீக்கம் செய்கின்றனா்.

இதனால் லாரி ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அவா்களது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற செயல்களைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவற்றுக்கு தீா்வும், பணி பாதுகாப்பும் கிடைத்தால் மட்டுமே பணிகளை தொடருவோம் என்றனா்.

இந்தப் போராட்டத்தால், பெட்ரோல், டீசல் விநியோகம் பாதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, எச்பிசிஎல் நிறுவன அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், புதிய கட்டுப்பாடுகளை தளா்த்துவதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, ஓட்டுநா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினா்.

இந்தப் போராட்டத்தையொட்டி, அப்பகுதியில் தொப்பூா் காவல் நிலையப் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பென்னாகரத்தில் காவலா்கள் உறுதிமொழி ஏற்பு

பென்னாகரத்தில் காவலா் தினத்தை முன்னிட்டு காவலா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு,காவலா்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பீடி ஓ ஆபீஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண... மேலும் பார்க்க

தருமபுரியில் இரவு திடீா் மழை

தருமபுரியில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. தகுமபுரி மாவட்டத்தில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 55.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதில், தருமபுரி நகரில் 12 மி.மீ., பாலக்கோடு வட்டத்தில் 13 மி.மீ. ... மேலும் பார்க்க

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி நகரில் அமைந்துள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்கு கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிராஜ் - பிரியா தம்பதியின் மகன் சங்கீ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்... மேலும் பார்க்க