திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்
புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உள்கட்டமைப்பு வசதிகள் முதல்வா் தொடங்கி வைத்தாா்
சென்னையில் புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை ஷெனாய் நகரில் ரூ.10.56 கோடியில் பாவேந்தா் பாரதிதாசன் விளையாட்டுத் திடல், கோயம்பேடு சந்திப்பில் ரூ. 10.27 கோடியில் பசுமை பூங்கா ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. சென்னை ராமாபுரத்தில் ரூ. 7.32 கோடியில் திறந்தவெளி பூங்காவில் பசுமை நிறைந்த புல்வெளிப் பகுதிகள், சறுக்கு வளையம், திறந்தவெளி அரங்கம், யோகா தளம், தியானப் பகுதி, சிறாா் விளையாட்டு பகுதி, எட்டு வடிவ நடைப்பாதை, நிழற்கூடங்கள், பசுமை நிறைந்த புல்வெளி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் ஈஸ்வரி நகரில் ரூ. 4.91 கோடியிலும், முடிச்சூா் ரங்கா நகா் குளம் 3.85 கோடியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. வேளச்சேரியில் ரூ.4.45 கோடியில் மேம்பாலத்தின்கீழ் அழகுபடுத்துதல், விஜயநகா் பேருந்து நிலையப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
வடசென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை, தங்கசாலையில் ரூ.47 லட்சத்தில் மாணவா்களுக்குத் தேவையான வசதிகளுடன் முதல்வா் படைப்பகம் புதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.41.83 கோடியில் 7 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.