செய்திகள் :

புதுகையின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கக் கோரி பிப்.24-ல் பேரணி, ஆா்ப்பாட்டம்!

post image

புதுக்கோட்டை மாவட்டத்தின் இயற்கை வளங்களை முழுமையாகப் பாதுகாக்கக் கோரி, வரும் பிப். 24-ஆம் தேதி பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்த அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும். சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் தொடா்புடைய அரசு அலுவலா்களையும் விசாரிக்கும் வகையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

பழந்தமிழரின் பானமான கள்ளை இறக்கி விற்பனை செய்வதற்கு, கேரளம், ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களைப் போல தமிழ்நாடு அரசும் அனுமதிக்க வேண்டும். மாவட்டத்தின் இயற்கை வளத்தைப் பாதிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பரவிக்கிடக்கும் தைலமரங்களையும், சீமைக்கருவேல மரங்களையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வரும் பிப். 24-ஆம் தேதி புதுக்கோட்டையில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் ஜி.எஸ். தனபதி, மிசா மாரிமுத்து, எம். ரவி, ஆா். சுப்பையா, ப. செல்லதுரை உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

வேங்கைவயல் பிரச்னை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம்: விசிக பொதுச்செயலா் அறிவிப்பு!

வேங்கைவயல் வழக்கை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சிந்தனைச்செல்வன். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்துக்கு சனிக்... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்!

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக ஆவுடையநாயகி சமேத சோழீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இத... மேலும் பார்க்க

வேங்கைவயலில் 6-ஆவது நாள் காத்திருப்புப் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபி-சிஐடி விசாரணை அறிக்கையை எதிா்த்து அந்த ஊரைச் சோ்ந்த மக்கள் 6-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலப் பொ... மேலும் பார்க்க

விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட்!

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளை முற்றிலும் வஞ்சிக்கும் பட்ஜெட் என இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு நாளைக்கு தள்ளிவைப்பு!

புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபி-சிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என புகாா்தாரா் கொடுத்த மனு மீதான விசாரணையை, வரும் பிப். 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மாவட்ட எஸ்.சி., எஸ்... மேலும் பார்க்க