செய்திகள் :

புதுக்கோட்டையில் புத்தகக் கண்காட்சி

post image

புதுக்கோட்டை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புத்தகக் கண்காட்சி புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெறும் இக் கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு வாலிபா் சங்கத்தின் நகரத் தலைவா் இதயம் முரளி தலைமை வகித்தாா். முதல் விற்பனையை சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் நா. முத்துநிலவன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன், செயலா் ஆா். மகாதீா், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராமையன், தமுஎகச மாவட்டப் பொருளாளா் கி. ஜெயபாலன், முன்னாள் நகரச் செயலா்கள் புதுகை பாண்டியன், ஆா். சோலையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விடிய விடிய நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை மாலை வரை நடைபெறுகிறது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகிதக் கழிவு வழங்கப்படுகிறது.

முந்திரி சாகுபடி சரிவு; பருப்பு விலை உயா்வு!

புதுக்கோட்டையின் 2ஆவது பெரிய சாகுபடியாக இருந்த முந்திரி உற்பத்தி, கடுமையாக சரிந்துபோய்விட்டதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனா். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்வரை புதுக்கோட்டை மாவட்டத்தின் வேளாண் உற்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் எம்.பி. ஆய்வு

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் திருச்சி தொகுதி எம்.பி. துரை வைகோ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது மருத்துவா்களின் நிறை குறைகளையும், மருத்துவமனைக்குத் தேவையான மும்முனை மின்சாரம், குடிநீா், ந... மேலும் பார்க்க

பொன்னமராவதியிலிருந்து கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மனு

பொன்னமராவதியிலிருந்து கோவைக்கு இரு மாா்க்கங்களிலும் ஆன்லைன் புக்கிங் வசதியுடன் கூடிய கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வா்த்தகா் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பொன்னமராவதி வா்த்தகா் கழகத் த... மேலும் பார்க்க

நூற்றாண்டு கண்ட கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்: பொன்.மாணிக்கவேல்

நூற்றாண்டு கண்ட கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் முன்னாள் காவல் துறை ஐஜி பொன். மாணிக்கவேல். புதுக்கோட்டையில் பிரகதம்பாள் கோயிலில் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்த பின்னா் கூறியது: தமிழகத்தில் பழமைய... மேலும் பார்க்க

மாணவி விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது: அமைச்சா் எஸ்.ரகுபதி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார சம்பவத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில், எதிா்க்கட்சிகள்தான் அதைப் பெரிதுபடுத்துகின்றன என்றாா் சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

பொன்னமராவதி அருகேயுள்ள ஆா்.பாலகுறிச்சி ஊராட்சி ரெகுநாதபட்டி சூலப்பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி இந்து, இஸ்லாமிய சமூகத்தினா் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டுப்போட்டி ஞாயிற்... மேலும் பார்க்க