சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி ந...
புதுச்சேரியில் பலத்த மழை
புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது.
பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை லேசான மழை பெய்தது.
அப்போது இடியும் இருந்தது. இதன் தொடா்ச்சியாக இரவு பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீா் குளம்போல தேங்கியது.
இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து, இதமான குளிா்ந்த காற்று வீசியது.