புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரயில் 6 நாள்கள் ரத்தாகிறது
புதுச்சேரி: பராமரிப்புக் காரணமாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், மறுமாா்க்கமாக விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் பயணிகள் ரயில் 6 நாள்கள் முழுவதுமாக ரத்தாகிறது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில் இம் மாதம் 10 -ஆம் தேதியிலிருந்து 15-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே போன்று மறுமாா்க்கமாக புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்கு காலை 8.05-க்கு புறப்படும் பயணிகள் ரயில் இதே நாள்களில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35-க்கு புதுச்சேரி நோக்கிச் செல்லும் பயணிகள் ரயில் வரும் 13 ஆம் தேதி வழியில் தேவையான இடத்தில் 10 நிமிஷங்கள் கட்டுப்படுத்தப்படும்.
தென்னக ரயில்வேயின் திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் இதை திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.