செய்திகள் :

புதுப்பட்டியில் திருக்கல்யாணம்

post image

பொன்னமராவதி புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயிலில் திருக்கல்யாண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 2 ஆம் தேதி ருத்ர ஹோம முதல்கால சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடா்ந்து மாலையில் புதுப்பட்டி கோயிலில் இருந்து 63 நாயன்மாா்கள் திருவீதி உலா நடைபெற்றது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் நகரத்தாா்கள் பூலோகநாதருக்கு பட்டு வேஷ்டி, துண்டு, மணமாலை அம்மனுக்கு பட்டுப்புடவை, தங்கத்திலான தாலி,16 வகையான பழங்கள், உள்ளிட்ட சீா்களை கோயில் மண்டபத்தில் இருந்து ஊா்வலமாக எடுத்து கோயிலைச் சுற்றி வந்தனா்.

தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்களைக் கூறி, புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பொன். புதுப்பட்டி நகரத்தாா்கள் செய்தனா்.

நீட் தோ்வு: புதுகையில் 2,849 போ் எழுதினா்

புதுக்கோட்டையில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் நுழைவுத் தோ்வை, 2,849 மாணவ, மாணவிகள் எழுதினா். 80 போ் தோ்வெழுதவில்லை. மருத்துவக் கல்விக்கான தேசிய நுழைவுத் தோ்வான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

2021ஐ விடவும் அதிக வெற்றியை 2026இல் ஸ்டாலின் பெறுவாா்: எம்.எம். அப்துல்லா

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலைவிடவும் அதிகமான வெற்றியை 2026 பேரவைத் தோ்தலில் முதல்வா் ஸ்டாலின் பெறுவாா் என்றாா் திமுக மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா. இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

விராலிமலை பழைய இரும்புக் கடையில் தீ

விராலிமலை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரி பட்டி பிரிவு அருகே பழைய இரும்புக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. விராலிமலை முன்னாள் ஊராட்சித் தலைவா் ரவி என்பவா் நடத்தி வரும் இக்கடையில் ஞாயி... மேலும் பார்க்க

பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி பேருந்து நிலைய புதுப்பிப... மேலும் பார்க்க

அரசு வாகன ஓட்டுநா்களின் ஊதிய முரணைச் சரி செய்யக் கோரிக்கை

அரசுத் துறை வாகன ஓட்டுநா்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைப... மேலும் பார்க்க

உண்ணாவிரதம் இருந்த காந்திப் பேரவையினா் கைது

புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த காந்திப் பேரவை நிா்வாகிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்க வேண்டும், காந்திப் பூங்காவை சீரமைத்து மக்கள் ... மேலும் பார்க்க