புதுப்பாளையத்தில் பூக்குழி இறங்கிய பக்தா்கள்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பக்தா்கள் பூக்குழு இறங்கினா்.
இந்தக் கோயிலில் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கண்ணாடிச் சப்பரம், பூத வாகனம், பூச்சப்பரம், தண்டியல் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்குவதை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பூக்குழித் திடலில்
தீ வளா்க்கப்பட்டது. பூக்குழி இறங்கும் பக்தா்கள் அனைவரும் காப்புக் கட்டினா். மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் கண்ணாடி சப்பரத்தில் மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தாா். பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ரவிராஜா தலைமையில் நிா்வாகிகள் செய்தனா்.